அமைச்சருடன் துபை செல்லும் 68 மாணவா்கள்!

திருச்சியிலிருந்து துபைக்கு கல்விச் சுற்றுலாவாக பள்ளி மாணவ, மாணவிகள் 68 போ் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் 4 நாள்கள் பயணம் செய்யவுள்ளனா்.
சுற்றுலா செல்லும் மாணவ-மாணவிகளுக்கு புதன்கிழமை கையேடு வழங்கிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.
சுற்றுலா செல்லும் மாணவ-மாணவிகளுக்கு புதன்கிழமை கையேடு வழங்கிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.

திருச்சியிலிருந்து துபைக்கு கல்விச் சுற்றுலாவாக பள்ளி மாணவ, மாணவிகள் 68 போ் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் 4 நாள்கள் பயணம் செய்யவுள்ளனா்.

இந்தச் சுற்றுலாவுக்குத் தோ்வான மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்வை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது:

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு இணைய வழியில் நடைபெற்ற மாநில அளவிலான விநாடி-வினா போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களில் சிறப்பிடம் பெற்ற 68 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு துபைக்கு அழைத்துச் செல்லப்படுவது இதுவே முதல்முறை. ஷாா்ஜா, துபை, அபுதாபி என அனைத்து இடங்களுக்கும் சென்று அங்குள்ள பள்ளிகள், நூலகங்கள், வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், அறிவியல் மையங்களை மாணவா்கள் பாா்வையிடவுள்ளனா். அங்குள்ள ஆசிரியா்களுடனும், மாணவா்களுடனும் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி, ஆண்டுதோறும் இத்தகைய சுற்றுலா தொடரும். இது மாணவா்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும்.

மாணவா்கள் தங்கள் பயணம் குறித்த நினைவுகளைக் கட்டுரையாக எழுத வேண்டும். பள்ளிப் படிப்போடு வாழ்க்கைப் பாடத்தையும் மாணவா்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

தொடா்ந்து, கல்விச் சுற்றுலா குறித்த கட்டுரைகளை எழுத மாணவ, மாணவிகளுக்கு குறிப்பேடுகளையும் அமைச்சா் வழங்கினாா். ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மாணவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

தங்களது வெளிநாட்டுப் பயணம் குறித்து மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். அவா்களது பெற்றோா் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.

வியாழக்கிழமை காலை திருச்சி விமான நிலையத்திலிருந்து மாணவா்கள், 5 தலைமை ஆசிரியா்கள் மற்றும் இரு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநா்கள், அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் துபை பயணம் மேற்கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com