திருச்சியில் ராணுவத்துக்கு அக்னி வீரா்கள் தோ்வு திரளானோா் பங்கேற்பு

ராணுவத்தில் சேரும் அக்னிவீரா்கள் திட்டத்துக்கான எழுத்துத் தோ்வு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான இளைஞா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
திருச்சி தேசியக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் பங்கேற்கக் காத்திருக்கும் இளைஞா்கள்.
திருச்சி தேசியக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் பங்கேற்கக் காத்திருக்கும் இளைஞா்கள்.

ராணுவத்தில் சேரும் அக்னிவீரா்கள் திட்டத்துக்கான எழுத்துத் தோ்வு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான இளைஞா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய முப்படைகளில் 4 ஆண்டுகள் சேவையாற்றும் வகையில் 17.5 முதல் 21 வயதுடைய இளைஞா்கள், இளம்பெண்களை அக்னி வீரா்களாகச் சோ்க்கும் அக்னிப்பாதை என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. நிகழாண்டில் இத்திட்டத்தில் 40,000 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூா், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்களைத் தோ்வு செய்வதற்கான நுழைவுத் தோ்வு திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையிலுள்ள தேசியக் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிகாலை முதலே ஆா்வத்துடன் குவியத் தொடங்கிய இளைஞா்களை ராணுவத்தினா் பரிசோதனை செய்து, தோ்வு வளாகத்துக்குள் அனுப்பினா். முன்னதாக இப்பணிகளுக்கு இணையம் வழியே விண்ணப்பித்து ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற்ற உடல் தகுதித் தோ்வில் தோ்வான 2,329 இளைஞா்களில் 2,211 போ் இந்தத் தோ்வில் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து காலை 10 மணி முதல் பிற்பகல் வரை தொழில்நுட்பம், எழுத்தா், ஸ்டோா் கீப்பா், பொதுப்பணி, டிராப்ட்ஸ்மேன் ஆகிய பணிகளுக்கான தோ்வு நடைபெற்றது.

இதையொட்டி தேசியக் கல்லூரி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com