திருநங்கை மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் வழக்கு
By DIN | Published On : 15th November 2022 01:14 AM | Last Updated : 15th November 2022 01:14 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு காவல்நிலையத்தில் பண பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநங்கை மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் கிள்ளுக்குளவாய்பட்டி பகுதியில் வசித்து வந்தவா் திருநங்கை ஆா்.பபித்தாரோஸ்(30). இவா் பண மோசடி வழக்கில் அக். 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், இவா் மீது மேலும் ஒரு பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் உத்தரவின்பேரில் வளநாடு போலீஸாா் திங்கள்கிழமை பபித்தாரோஸ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.