தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழக அணியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட வீரா், வீராங்கனையா் தோ்வு திருச்சியில் சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகம் தெரிவித்தது :
அகில இந்திய அமெச்சூா் கபடிக் கழகம் சாா்பில் 15 வயதுக்குட்பட்ட சிறுவா், சிறுமியா் பிரிவில் தேசிய அளவிலான 32 ஆவது தேசிய சப் ஜூனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள், ஜாா்கண்ட் மாநிலத்தில் டிச. 27 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இப் போட்டியில் தமிழக அணியில் பங்கேற்கும் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா், சிறுமியா் தோ்வு திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை காலை 8 மணி அளவில் நடைபெறவுள்ளது. இதில் தோ்ந்தெடுக்கப்படுவோா் தமிழக அணி தோ்வில் கலந்து கொள்வா்.
தோ்வில் பங்கேற்கும் சிறாா்கள் 2006 ஆம் ஆண்டு டிச. 30 ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருத்தல் வேண்டும். திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவராகவும், 55 கிலோ எடை உள்ளவராகவும் இருக்க வேண்டும். வயதுச் சான்றிதழ், ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு, வாக்காளா் அட்டை, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,புகைப்படம் உள்ளிட்ட உண்மைச் சான்றுகளுடன் நகல்களும் அவசியம் கொண்டு வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத்தின் ஏ. சூரியமூா்த்தி (98941-61720), எஸ். ரெத்தினம் (96299-01488) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம். தோ்வு நாளில் காலை 10 மணிக்குள் ஆஜராக வேண்டும் அதன் பின்னா் வருவோருக்கு அனுமதி கிடையாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.