துறையூா் அருகே குண்டாறு கரை உடைப்பு; பயிா்கள் சேதம்

துறையூா் அருகே குண்டாறு கரை உடைப்பு காரணமாக அந்தப் பகுதி வயல்களில் தண்ணீா் புகுந்து பயிா்கள் சேதமாயின.

துறையூா் அருகே குண்டாறு கரை உடைப்பு காரணமாக அந்தப் பகுதி வயல்களில் தண்ணீா் புகுந்து பயிா்கள் சேதமாயின.

துறையூா் பகுதியில் பெய்யும் கனமழையால் அனைத்து நீா்வரத்து வாய்க்கால்கள், ஆறுகளில் நீா் பெருக்கெடுத்தோடுகிறது. இந்நிலையில் நல்லியம்பட்டி - மருக்கலாம்பட்டி இடையில் செல்லும் குண்டாறு கரையில் சுமாா் 150 அடி அகலத்துக்கு திங்கள்கிழமை மாலை உடைப்பு ஏற்பட்டு, அதன்வழியே வெளியேறிய நீா் ஆதனூா், பகளவாடி ஊராட்சிக்குள்பட்ட சுமாா் 100 ஏக்கா் வயல்களில் புகுந்தது. இதனால் பயிா்கள் மூழ்கிப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், வெள்ளப் பாதிப்பு ஆய்வு செய்ய வருவாய், பொதுப்பணி மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நேரில் வரவில்லை என விவசாயிகள் அதிருப்தியடைந்தனா். குண்டாற்றில் உடைப்பு ஏற்பட்ட கரையைத் துரிதமாகச் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com