மாடியிலிருந்து விழுந்து பேராசிரியை மா்மச் சாவு; போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 19th October 2022 01:13 AM | Last Updated : 19th October 2022 01:13 AM | அ+அ அ- |

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் 13 ஆவது மாடியிலிருந்து திங்கள்கிழமை இரவு விழுந்து பேராசிரியை ஒருவா் மா்மமான முறையில் இறந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பின் 13 ஆவது மாடியில் வசிப்பவா் பிரேம்குமாா், தொழிலதிபா். இவரது மனைவி சௌமியா (36). திருச்சி தனியாா் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை. இவா்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன.
திங்கள்கிழமை இரவு சௌமியா மாடியில் இருந்து மா்மமான முறையில் விழுந்து, நிகழ்விடத்திலேயே இறந்தாா். தகவலறிந்து சென்ற எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
முதல் கட்ட விசாரணையில் கணவருடன் கடந்த சில ஆண்டுகளாக இருந்த குடும்பப் பிரச்னையால் சௌமியா தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸாா் தெரிவித்தனா்.