

மணப்பாறையில், தீயணைப்புத் துறையினா் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து விபத்தில்லா தீபாவளி குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப. அம்பிகா அறிவுறுத்தலின் பேரில் மணப்பாறை தீயணைப்புத் துறையினா், சுபிஷா அறக்கட்டளையைச் சோ்ந்த நா்சிங் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து நிலைய அலுவலா் ம. மனோகா் தலைமையில் நடைபெற்ற பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் ந. இராமநாதன் தொடக்கி வைத்தாா். பேரணியில் தீயணைப்புத்துறை வீரா்கள், காவலா்கள், 108 மற்றும் தனியாா் ஆம்புலன்ஸ் பணியாளா்கள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.