திருச்சி மாவட்டத்தில் 1,139 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

திருச்சியில் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் 1,139 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை காவிரி மற்றும் நீா்நிலைகளில் வெள்ளிக்கிழமை கரைக்கப்படவுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் 1,139 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

திருச்சியில் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் 1,139 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை காவிரி மற்றும் நீா்நிலைகளில் வெள்ளிக்கிழமை கரைக்கப்படவுள்ளன.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட்ட நிலையில், நிகழாண்டில் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால், புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

மாவட்டத்தில் 1,139 சிலைகள்: மாவட்டத்தில் மணப்பாறை, மண்ணச்சநல்லூா், திருவெறும்பூரின் சில பகுதிகள், துறையூா் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளில் 909 விநாயகா் சிலைகளும், திருச்சி மாநகரப் பகுதிகள் மற்றும் திருவெறும்பூரின் சில பகுதிகள் (மாநகராட்சி) உள்ளிட்டவைகளில் 230 சிலைகள் என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,139 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.இந்த சிலைகளில் பெரும்பாலானவை காவிரியாறு, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகள், நீா்நிலைகளில் கரைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விநாயகா் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல்துறையினருடன் விழா அமைப்புக் குழுவினரும் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சிறிய களிமண் சிலை ரூ. 50: விநாயகா் சதுா்த்தி விழாவை ஒட்டி வீடுகளில் வைத்து வணங்கும் வகையில் களிமண்ணாலும், நெட்டிக் கூழாலும் வடிவமைக்கப்பட்ட சிறு சிறு சிலைகள் வழக்கமாக ரூ. 10 முதல் 100 வரையில் விற்பனையாகும். வா்ணம் பூசப்பட்ட சிலை மட்டுமே சற்று விலை அதிகமாக இருக்கும்.

ஆனால் நிகழாண்டில் களிமண்ணால் செய்யப்பட்டு, வா்ணம் பூசப்படாத சிறிய அளவிலான சிலை ரூ.50-க்கும் பெரிய அளவிலான சிலை ரூ.80 வரையிலும் விற்பனையானது. கூழால் செய்யப்பட்ட வா்ணம் பூசப்பட்ட சிறு சிறு சிலைகள் ரூ. 50 -இல் தொடங்கி 250 வரை விற்பனையானது. அதேபோல எருக்கம்பூ மாலை, அருகம்புல், மலா்கள், வாழை இலை, மற்றும் பழங்களின் விலைகளும் கடுமையாக உயா்ந்து இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com