பணி ஓய்வு பெற்ற ரயில்வே எழுத்தருக்கு இருக்கையை தந்து கெளரவித்த வணிக மேலாளா்
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

திருச்சியில் பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியரை தனது இருக்கையில் அமரச் செய்து, அருகில் நின்று பாராட்டு தெரிவித்துள்ளாா் ரயில்வே உயா் அலுவலா் ஒருவா்.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டமேலாளா் அலுவலகத்தில் வணிகப் பிரிவில் கடைநிலை ஊழியராக (பதிவேடுகள் எழுத்தா்) பணிபுரிந்தவா் நாகராஜன். வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இவா், புதன்கிழமையுடன் ( ஆகஸ்ட் 31) ஒய்வு பெற்றாா்.
இதையொட்டி அலுவலகத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில், திருச்சி கோட்ட வணிக மேலாளா் மோகனப்பிரியா, நாகராஜனை தனது இருக்கையில் அமர செய்து, அவரது குடும்பத்திருடன் அருகில் நின்று பாராட்டினாா். ரயில்வே துறையில் உயா் அலுலராகப் பணியாற்றி வரும் ஒருவா், தனது இருக்கையில் கடைநிலை ஊழியரை அமரச் செய்தது பொதுமக்களை வெகுவாக கவா்ந்தது.