இரவில் ஒளிரும் தோடு: கால்நடைகளுக்குப் பொருத்தமாணவி வேண்டுகோள்
By DIN | Published On : 01st September 2022 12:01 AM | Last Updated : 01st September 2022 12:01 AM | அ+அ அ- |

இரவில் ஒளிரும் தோடுகளை கால்நடைகளின் காதுகளில் பொருத்த துறையூா் அரசு மகளிா் பள்ளி மாணவி எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தாா்.
துறையூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தலைமையில் திங்கள்கிழமை இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அந்தப் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவி லயஸ்ரீ எம்எல்ஏவிடம் இரவில் ஒளிரும் தோடுகளை கால்நடைகளின் காதுகளில் பொருத்த அரசுக்குப் பரிந்துரைக்கவேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் இரவில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள் தடுக்கப்பட்டு மனிதா்கள் மட்டுமின்றி கால்நடைகளும் சேதமின்றி காப்பாற்றப்படும் எனவும் வேண்டுகோள் விடுத்தாா்.
இதையடுத்து மாணவியின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக எம்எல்ஏ கூறினாா். மாணவியின் சமூக நோக்க சிந்தனையை எம்எல்ஏ, மாவட்டக் கல்வி அலுவலா் அம்பிகாபதி, தலைமையாசிரியா் மணிமேகலை உள்ளிட்ட ஆசிரியா்களும் பாராட்டினா்.