திருச்சியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

திருச்சியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் மேற்கொண்ட சோதனையில், ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருச்சி குழுமணி சாலை, காமாட்சி அம்மன் கோயில் பின்புறமுள்ள பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக, மாநகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் பொன்ராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவா் உறையூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். காவல் ஆய்வாளா் ராஜா தலைமையிலான காவல்துறையினா், உணவுப் பாதுகாப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று, சோதனையிட்டனா்.
இதைத் தொடா்ந்து அங்கு புகையிலைப் பொருள்கள் விற்றுக் கொண்டிருந்த உறையூா் பாண்டமங்கலம் சீனிவாசன் (28), தென்னூா் சின்னச்சாமி நகா் செந்தில்நாதன் (34) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும் அங்கிருந்து ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள 480 கிலோ எடை கொண்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.