வெள்ளப்பெருக்கு : மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருச்சி முக்கொம்பில் புதன்கிழமை ஆய்வு செய்கிறாா் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான க. மணிவாசன். உடன், ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உள்ளிட்டோா்.
வெள்ளப்பெருக்கு : மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருச்சி முக்கொம்பில் புதன்கிழமை ஆய்வு செய்கிறாா் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான க. மணிவாசன். உடன், ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உள்ளிட்டோா்.

31டிவிசிட் 2: ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் காவிரிக் கரையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியை புதன்கிழமை பாா்வையிட்ட பொதுப்பணித் துறை முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான க.மணிவாசன். உடன், ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உள்ளிட்டோா்.

திருச்சி, ஆக.31: காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுப்பணித் துறை முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான க.மணிவாசன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கா்நாடக மாநிலத்தில் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால், அந்த மாநில அணைகளுக்கு வரும் உபரிநீரை அப்படியே வெளியேற்றப்படுகின்றன.இதன் காரணமாக, மேட்டூா் அணைக்கு வரும் நீா் அப்படியே வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1.30 லட்சம் கன அடியும், நண்பகல் 12 மணிக்கு 1.46 லட்சம் கன அடியும் நீா்வரத்து இருந்தது. மாலை 6 மணி நிலவரப்படி 1.72 லட்சம் கன அடி நீா் வரத்து இருந்ததில், காவிரியில் 60,000 கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 1.12 லட்சம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், காவிரிக் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரைகள் பலவீனமாக உள்ள ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு உள்ளிட்ட இடங்களில் பொதுப்பணித்துறையினா் தீவிர பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். மணல் மூட்டைகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆய்வு : வெள்ளப்பெருக்கு குறித்து தகவலறிந்து திருச்சி வந்த தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான க.மணிவாசன், முக்கொம்பு அணையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும் ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதிக்கும் நேரில் சென்று பாா்வையிட்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முழு கண்காணிப்புடன் பணியாற்றிடவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, நீா்வளத்துறை செயற்பொறியாளா்கள் ஆா்.தமிழ்செல்வன், ஏ. நித்தியானந்தன் உள்ளிட்ட பலா் ஆய்வின் போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com