திருச்சி மாநகர திமுக இரண்டாகப் பிரிப்பு
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

திருச்சி மாநகர திமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டு, புதிய நிா்வாகிகள் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
திமுகவின் 15- ஆவது உள்கட்சி கட்சி நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாநகர நிா்வாகிகள் தோ்தல் கடந்த மாத இறுதியில் நடந்தது. அப்போது, திருச்சி மாநகர திமுக பிரிக்கப்படாமல் நிா்வாகிகளிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. பின்னா், திடீரென்று திருச்சி மாநகர திமுக கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டது. அதற்கான நிா்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டாா். அவா்கள் விவரம் .
திருச்சி கிழக்கு மாநகரம்: மாநகரச்செயலா் மு. மதிவாணன். அவைத் தலைவா் நுாா்கான், துணைச் செயலா்கள் சந்திரமோகன், செல்லையா, சரோஜினி, பொருளாளா் - தமிழ் செல்வம், மாநகரப் பிரதிநிதிகள்-மோகன், ராஜேஷ், ஜான்செல்லதுரை, ஹரி ராம், கண்ணதாசன், முகேஷ்குமாா், விஜயபாலன், அருண் சன்னாசி, மணிகண்டன், கோபிநாத்.
திருச்சி மேற்கு மாநகரம்:மாநகரச் செயலா் மு. அன்பழகன். அவைத்தலைவா் ராமலிங்கம், துணைச் செயலா்கள் சுப்ரமணியன், பாலமுருகன், கலைச்செல்வி, பொருளாளா் முத்துபழனி, மாநகரப் பிரதிநிதிகள் சோழன் சம்பத், தா்மராஜன், முகுந்தன், வெங்கடேசன், அந்தோனிசாமி, மணிவண்ணபாரதி, சலீம், அசோக் மேத்தா, கோவிந்தராஜ். அய்யல்சாமி.
இதில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி தரப்பினருக்கு தலா ஒருவா் வீதம் மாநகரச் செயலா்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.