ஏடிஎம் மையத்தில் சுகாதாரம் தேவை
By DIN | Published On : 07th September 2022 04:03 AM | Last Updated : 07th September 2022 04:03 AM | அ+அ அ- |

திருச்சியில் ஏடிஎம் மையம் ஒன்று முறையான பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் வாடிக்கையாளா்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையம் வயா்லெஸ் சாலையில் உள்ளபஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மையத்தை வங்கி நிா்வாகம் முறையாகப் பராமரிப்பதில்லையாம். அருகிலேயே உள்ள இரு தனியாா் ஏடிஎம் மையங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட இந்த ஏடிஎம் மையத்தில் மட்டும் எப்போதும் குப்பை உள்ளது. அந்த அறையைத் தூய்மைப்படுத்தப்படுவதே இல்லையாம். குளிா்சாதன இயந்திரம் (ஏசி) இயங்குவதில்லை. மேலும் மையத்தின் கதவைத் திறந்தால் மூட முடியாது, மூடினால் திறக்க முடியாது. அந்தளவுக்கு பழுதாகி கதவு திறந்து மூடும்போது தரையுடன் உரசுகிறது.
ஏடிஎம் ரசீதுகள் அகற்றப்படாமல் அங்குள்ள குப்பை தொட்டி நிறைந்து, அருகிலேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளன. கதவு மூடப்பட முடியாத நிலையில் உள்ளதால், மழை நேரங்களில் அப்பகுதியில் திரியும் தெரு நாய்கள் உள்ளே சென்று தங்கி விடுகின்றன. அக்கம் பக்கத்தினா் இதுகுறித்து வங்கி அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும் பயன் இல்லையாம். +