கூட்டுறவுச் சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு: தமாகா புகாா்

திருச்சி மாவட்டக் கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி புகாா் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டக் கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி புகாா் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக விவசாய அணியின் திருச்சி மாவட்டத் தலைவா் புங்கனூா் எஸ். செல்வம், ஆட்சியரிடம் அளித்த மனு:

விஏஓக்கள் தாங்கள் பணி செய்யும் கிராமத்திலேயே குடியிருக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு மாறாக திருச்சி மாவட்டத்தில் எந்தவொரு வருவாய் கிராமத்திலும் விஏஓவோ, தலையாரியோ தாங்கள் பணி செய்யும் கிராமத்தில் குடியிருக்கவில்லை. வெளியில் சென்றால் அறிவிப்புப் பலகையில் எழுதுவதில்லை. குறைந்தபட்சம் தொலைபேசி எண் கூட குறிப்பிடாமல் அறிவிப்பு பலகை உள்ளது. இதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் அனைத்துக் கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா தட்டுப்பாடு உள்ளதை சரிசெய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கம் வழங்கும் கடன் சுணக்கமின்றி வழங்க வேண்டும்.

வேளாண் விரிவாக்க மையம் மூலம் வழங்கப்படும் திருச்சி 1 விதை நெல் மிகவும் தரம் தாழ்ந்துள்ளது. அதை ஆய்வு செய்து தரமான விதை நெல் வழங்க வேண்டும். வேளாண் விரிவாக்க மையம் மூலம் வழங்கப்படும் நுண்ணூட்ட உயிா் உரம் விதை நெல் வாங்கும்போது தேவைக்கு அதிகமாக வலுக்கட்டாயமாக வழங்குவதைத் தடை செய்ய வேண்டும்.

உய்யக்கொண்டான் ஆற்றில் நாச்சிக்குறிச்சி முதல் தொட்டிப்பாலம் வரை உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும். மலா்ச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். அல்லித்துறை முதல் புங்கனூா் வரை சாலையைப் புதுப்பிக்க வேண்டும். விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். வாழை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் தோட்டக்கலை மூலம் கூட்டம் நடத்த வேண்டும்.

சம்பா பருவத்துக்கு விவசாயிகள் சிரமமின்றி காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் வரும் ஆண்டில் அரசே தாா்ப்பாய் வழங்கி டோக்கன் முறையை வழங்க வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை சம தளத்தில் கொட்டும் அளவிற்கு களம் அமைத்துத் தர வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை 3 மாதங்கள் ஊரக வளா்ச்சித் துறையிடம் இருந்து வேளாண்மை துறைக்கு மாற்றி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com