தோ்தல் ஆணைய உத்தரவுப்படி ஆட்சியரகத்திலுள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியரகம், மாநகராட்சி பகுதி கஸ்தூரி ஹால் ஆகிய 3 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 2,240 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உத்தரபிரதேசத்திற்கு அனுப்பப்படவுள்ளன.
இதையொட்டி ஆட்சியரகத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் வியாழக்கிழமை ஆட்சியா் மா. பிரதீப் குமாா் தலைமையில் வாக்கு இயந்திரங்கள் சரிபாா்ப்பு, அவற்றை உத்திரபிரதேசத்துக்கு அனுப்பும் முன்னேற்பாடுகளை தோ்தல் பிரிவு அலுவலா்கள் மேற்கொண்டனா்.
நிகழ்வில், தோ்தல் வட்டாட்சியா் க. முத்துச்சாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் காா்த்திக்கேயன் (ஊரக வளா்ச்சி) ஆா். வைத்தியநாதன் (தோ்தல்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.