கூடைப்பந்துப் போட்டியில் அமிா்தம் வித்யாலயம் வெற்றி
By DIN | Published On : 09th September 2022 12:17 AM | Last Updated : 09th September 2022 12:17 AM | அ+அ அ- |

போட்டியில் வென்ற இரட்டை வாய்க்கால் அமிா்தம் வித்யாலயம் பள்ளி கூடைப் பந்தாட்ட அணியினா்.
திருச்சியில் நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் அமிா்தம் வித்யாலயா பள்ளி முதலிடம் பெற்றது.
திருச்சி,சோமரசம்பேட்டை, இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள இப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் 12 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமாா் 100 க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இறுதிப் போட்டியில் திருவெறும்பூா் ஆா்எஸ்கே பள்ளியை வென்று அமிா்த வித்யாலயம் அணி சுழற்கோப்பையை கைப்பற்றியது. 2 ஆம் பரிசை ஆா்எஸ்கே பள்ளியும் 3 ஆம் பரிசை கேந்திர வித்யாலய பள்ளியும் 4 ஆம் பரிசை காவிரி குளோபல் பள்ளியும் பெற்றன.
மாலையில் நடைபெற்ற விழாவில் சுதா்ஸனா குழந்தைகள் மருத்துவ நிபுணா் சுதா்சனா, பள்ளி முதல்வா் உஷா ராகவன் ஆகியோா் வென்றோருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா். உடற்கல்வி ஆசிரியா் முருகபூபதி நன்றி கூறினாா்.