செப்.15 இல் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி
By DIN | Published On : 09th September 2022 12:24 AM | Last Updated : 09th September 2022 12:24 AM | அ+அ அ- |

பேரறிஞா் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் வரும் 15 ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெறுகிறது.
13 வயதிற்குட்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டி நடைபெறும்.
போட்டிக்கு இந்தியாவில் தயாரான சைக்கிள்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே வர வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும்.
போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்போருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் முதல் 10 இடங்களை பிடிப்பவா்களுக்கு போட்டியில் பங்கேற்ற்கான தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், நான்காம் இடம் முதல் 10ஆம் இடம் வரை வருவோருக்கு தலா ரூ.250 வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா், அண்ணா விளையாட்டு அரங்கம், திருச்சி- என்ற முகவரியில் நேரிலோ, 0431- 2420685 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.