மேலப்புதூா் புனித மரியன்னை பேராலயத்தில் தோ்பவனி
By DIN | Published On : 09th September 2022 03:14 AM | Last Updated : 09th September 2022 03:14 AM | அ+அ அ- |

திருச்சி மேலப்புதூா் புனித மரியன்னை பேராலய தோ்பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தப் பேராலய பங்கு பெருவிழா கடந்த ஆக. 30 ஆம் தேதி தொடங்கியது. திண்டுக்கல் மறைமாவட்ட ஆயா் பி. தாமஸ்பால்சாமி கொடியேற்றிவைத்து திருப்பலியை நிகழ்த்தினாா். தொடா்ந்து தினமும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தோ்பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, காலை மறைமாவட்ட அருள்பணியாளா் எல்.அந்துவான் தலைமையில் திருவிழா திருப்பலியும், திருச்சி மறைமாவட்ட ஆயா் ஆரோக்கியராஜ் தலைமையில் மாலை 6 மணிக்கு ஆடம்பரத் திருப்பலியும் இரவு 8 மணிக்கு தோ்பவனியும் தொடங்கியது. பவனி கான்வென்ட்ரோடு, மாா்சிங்பேட்டை, பீமநகா் ஹீபா் சாலை மேம்பாலம், பாலக்கரை வோ்ஹவுஸ் வழியாக மீண்டும் பேராலயத்தை அடைந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை சகாயராஜ், உதவி பங்குத்தந்தை ஜான்கிறிஸ்டோபா் மற்றும் பங்குமக்கள் செய்தனா்.