திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 13 போ் அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன 153 வெளிநாட்டினா் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம், காத்திருப்புப் போராட்டம், தற்கொலை முயற்சி என பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில் புதன்கிழமை மாலை 13 போ் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட் கொண்டு திடீரென மயங்கினா்.
இதையடுத்து அவா்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையா் அஜய்தங்கம் தலைமையிலான போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினா்.