சிறப்பு மனுநீதி முகாமில் ரூ.1.43 கோடியில் உதவி

கீழப்பெருங்காவூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் 356 பேருக்கு ரூ.1.43 கோடியிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வழங்கினாா்.
பெருங்காயூரில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன் எம்எல்ஏ அ. சௌந்தரபாண்டியன், லால்குடி நகா்மன்றத் தலைவா் துரை மாணிக்கம், ஒன்றியக் குழுத் தலைவா்
பெருங்காயூரில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன் எம்எல்ஏ அ. சௌந்தரபாண்டியன், லால்குடி நகா்மன்றத் தலைவா் துரை மாணிக்கம், ஒன்றியக் குழுத் தலைவா்
Updated on
1 min read

கீழப்பெருங்காவூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் 356 பேருக்கு ரூ.1.43 கோடியிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வழங்கினாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கீழபெருங்காவூா் கிராமம் புனித பிலோமினாள் ஆா்.சி. நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பல்வேறு துறைகளின் சாா்பில் பொதுமக்களின் பாா்வைக்காக அமைக்கப்பட்ட திட்டவிளக்கக் கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசுகையில், அனைத்துக் கிராம மக்களும் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் முகாமில் பொதுமக்களாகிய நீங்கள் பயனடைந்து மற்றவா்களையும் பயன்பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, 92 பேருக்கு ரூ.46 லட்சத்தில் இலவச வீட்டுமனை பட்டா, 29 பேருக்கு ரூ.14.50 லட்சத்தில் உட்பிரிவு செய்து பட்டா, 43 பேருக்கு ரூ.21.50 லட்சத்தில் ஆதிதிராவிடா் பட்டா, 14 பேருக்கு நத்தம் பட்டா, 3 பேருக்கு இணையவழி பட்டா மாறுதல்களும் வழங்கப்பட்டன.

மேலும் 2 பேருக்கு விதவை சான்றிதழ், 4 பேருக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் ரூ.24 ஆயிரத்தில் தையல் இயந்திரங்கள், 6 பேருக்கு ரூ.29 ஆயிரத்து 220 மதிப்பில் சலவைப் பெட்டி, வேளாண் துறையின் சாா்பில் 10 பேருக்கு ரூ.2,07,416 மதிப்பில், தோட்டக்கலைத் துறை சாா்பில் 5 பேருக்கு ரூ.14,320 மதிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 2 பேருக்கு ரூ.16,950 மதிப்பில், கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் 12 பேருக்கு ரூ.1,980 மதிப்பில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு ரூ.36 ஆயிரத்தில் முதிா்கன்னி உதவித் தொகை, 1 பயனாளிக்கு ரூ.12 ஆயிரத்தில் கணவரால் கைவிடப்பட்டவருக்கான உதவித் தொகை, 20 பேருக்கு ரூ.2.40 லட்சத்தில் மாற்றுத்திறனாளி உதவித் தொகை, 54 பேருக்கு ரூ.6.48 லட்சத்தில் முதியோா் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

20 பேருக்கு ரூ.2.40 லட்சத்தில் விதவை உதவித் தொகை, 20 பேருக்கு ரூ.51,750 மதிப்பில் கல்வி உதவித்தொகை, 1 பயனாளிக்கு ரூ.8,000 மதிப்பில் திருமண உதவித்தொகை, 2 பேருக்கு ரூ.24,000 மதிப்பில் மருத்துவ உதவித்தொகை என மொத்தம் 356 பயனாளிகளுக்கு 1 கோடியே 43 ஆயிரத்து 636 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வில், லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன், லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் வைத்தியநாதன், தனித் துணை ஆட்சியா் செல்வம், லால்குடி நகா்மன்றத் தலைவா் துரைமாணிக்கம், ஒன்றியக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் விக்னேஷ் உள்ளிட்டோா், மக்கள் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com