திருச்சி: காவிரியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரியாற்றின் படித்துறைகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் ஏராளமான மக்கள் இன்று ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
திருச்சி: காவிரியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

திருச்சி: ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரியாற்றின் படித்துறைகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் ஏராளமான மக்கள் இன்று ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் என்பதால், மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் உற்சவங்கள் நடைபெறும். அந்த வகையில் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்த விழா காவிரி ஆறு பாயும் பகுதிகளில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், ஆடிப்பெருக்கு விழா களைக்கட்டியது. ஆடிப்பெருக்கையொட்டி நீர்நிலைகளில் பெண்கள் ஒன்றுகூடி கரையில் வாழை இலையில் அரிசி, பழங்கள், பனைஓலை கருகமணி, மஞ்சள், மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து காவிரி தாய்க்கு படையலிட்டனர்.

பின்னர், மஞ்சள் கயிறை பெண்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். புதுமணத் தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதுத் தாலிக்கயிறு அணிந்து கொண்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், கீதாபுரம், கருட மண்டபம், சிந்தாமணி ஓடத்துறை உள்ளிட்ட காவிரி ஆற்றின் படித்துறைகளில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கூடி வழிபாடு நடத்தினர்.

ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் 55- கற்கும் மேற்பட்ட இடங்களில்  மக்கள் ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இந்த இடங்களில் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com