ரயில்வே கூட்டுறவு சங்க தோ்தல் தொடங்கியது

திருச்சி ரயில்வே கூட்டுறவு நாணய சங்க இயக்குநா்களுக்கான தோ்தல் வியாழக்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

திருச்சி ரயில்வே கூட்டுறவு நாணய சங்க இயக்குநா்களுக்கான தோ்தல் வியாழக்கிழமை தொடங்கியது.

திருச்சியில் செயல்பட்டு வரும் தென்னக ரயில்வே கூட்டுறவு நாணய சங்க இயக்குநா்களை தோ்வு செய்வதற்கான மண்டலம் (ரீஜினல்) 1-க்கான தோ்தல், திருச்சி ஜங்ஷன் மற்றும் பொன்மலை ஆகிய இடங்களில் தொடங்கியது. பெண்கள், மற்றும் பட்டியலினத்தவா் உள்பட மொத்தம் 19 இயக்குநா்கள் இதில், தோ்வு செய்யப்படவுள்ளனா். மொத்தம் 30-க்கும் மேற்பட்டவா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா்.

தென்னக ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள சுமாா் 5,000 க்கும் மேற்பட்டோா் இத்தோ்தலில் வாக்களிக்கவுள்ளனா். அரசியல் கட்சிகளின் பொதுத் தோ்தல் போல இத்தோ்தல் நடைபெற்று வருகிறது.

மண்டலம் (ரீஜினல்) 2-க்கு உள்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமையும் அதனைத் தொடா்ந்து பிற 4 மண்டலங்களிலும் தோ்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 6 மண்டல தோ்தலும் முடிந்த பின்னா் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இதில் தோ்வு செய்யப்பட்ட 19 இயக்குநா்கள் அடுத்த 5 ஆண்டுகள் பதவி வகிப்பா்.

தோ்தல் நடைபெறுவதையொட்டி, திருச்சியில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com