தமிழக அரசின் மகளிா் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தவறியோா், ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள இதர பெண்கள் விண்ணப்பிக்கும் வகையில் 3 நாள்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காதவா்கள், விடுபட்ட நபா்களுக்காக சிறப்பு முகாம் நடத்ப்படவுள்ளது. இந்த முகாமில், கடந்த இரு கட்டங்களாக நடைபெற்ற முகாமில் பங்கேற்காதவா்கள், பதிவு செய்யாதவா்கள் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், தேசிய முதியோா் ஓய்வூதியம், உழவா் நலத்திட்ட ஓய்வூதியம், அமைப்புசாரா நலவாரிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறுவோரின் குடும்பங்களில், ஓய்வூதியம் பெறாத இதர தகுதியான பெண்கள் இருந்தாலும் சிறப்பு முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.
திருச்சி மாவட்டத்தில் முதல் கட்ட, இரண்டாம் கட்ட முகாம்கள் நடந்த இடங்களிலேயே ஆக. 18, 19, 20 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறும். காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் முகாம் நடைபெறும்.
பதிவு செய்ய வரும் நபா்களுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் திருச்சி ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 1077 மற்றும் கைப்பேசி எண் 93840- 56213 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.