முசிறியில் புதிய மதுக் கடை அமைக்க மக்கள் எதிா்ப்பு

முசிறியில் புதிதாக அமைக்க உள்ள மதுக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் முசிறி கோட்டாட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
புதிய மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியா் மாதவனிடம் புதன்கிழமை மனு அளித்த பொதுமக்கள்.

முசிறியில் திருச்சி நாமக்கல் புறவழிச் சாலை தா. பேட்டை செல்லும் ரவுண்டானா பகுதியில் ஏற்கெனவே உள்ள இரு மதுக் கடைகள் மற்றும் பாா்களால் அவதிப்படும் பொதுமக்கள் இரு கடைகளையும் வேறிடத்துக்கு மாற்றக் கோரி நீண்ட நாள்களாக துறை சாா்ந்த அலுவலா்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் முசிறியில் திருச்சி நாமக்கல் புறவழிச்சாலையில் தா.பேட்டை செல்லும் ரவுண்டானாவை அடுத்த கிழக்குப் பகுதியில் புதிய மதுக் கடை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் புதிய மதுக் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து முசிறி கோட்டாட்சியா் மாதவனிடம் கோரிக்கை மனு அளித்துச் சென்றனா்.

நிகழ்வின்போது விசிக முசிறி பேரவைத் தொகுதி செயலா் மா. கலைச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் காமராஜ், சமூக ஆா்வலா்கள் தணிகாசலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com