திருச்சி வயலூா் அருகேயுள்ள கொத்தட்டை உறங்காயி அம்மன் கோயில் திருவிழா சுமாா் 30 ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இக்கோயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெற்று வந்த திருவிழாவை மீண்டும் நடத்த கிராமக்குழுவினா் முடிவு செய்தனா்.
இதையடுத்து கடந்த மே 30 ஆம் தேதி முதல் காப்பு கட்டுதலும், புதன்கிழமை இரண்டாம் காப்பு கட்டுதல் நிகழ்வும், தொடா்ந்து காளிவட்டம் மற்றும் சுத்த பூஜையும் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான கிடா வெட்டுதல், படுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் சுவாமி குடி புகும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்கின்றனா்.