அணலை பெரியகாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு

திருச்சி திருப்பராய்த்துறை அருகே அணலை கிராமத்தில் உள்ள பெரியகாண்டி அம்மன், கன்னிமாா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி திருப்பராய்த்துறை அணலை கிராமம் பெரியகாண்டி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.

அணலை கிராமத்தில் உய்யக்கொண்டான் நதிக்கரையில் உள்ள பெரியகாண்டி அம்மன், கன்னிமாா் கோயிலில் சித்தி விநாயகா், பாலமுருகன், பெரியகாண்டி அம்மன், சப்த கன்னிமாா் தெய்வங்கள், மாசி பெரியண்ணசாமி, அண்ணாவி, மந்திர மகாமுனி உள்ளிட்ட சந்நிதிகளில் குடமுழுக்கு நடத்த 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், புண்யாகவாசனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் திருப்பராய்த்துறை காவிரி நதியிலிருந்து புனிதநீா் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து புதன்கிழமை காலை காலை 9.30 மணிக்கு சந்நிதிகளில் சம்ப்ரோக்ஷணமும், 10 மணிக்கு குடமுழுக்கும் நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாராதனை, புனித நீா் தெளித்தல், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com