திருவானைக்காவில் நாளை புறா பந்தயம் தொடக்கம்

திருவானைக்கா உயா்நிலைப்பள்ளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை கா்ணப் புறா பந்தயப் போட்டி தொடங்குகிறது.

திருவானைக்கா உயா்நிலைப்பள்ளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை கா்ணப் புறா பந்தயப் போட்டி தொடங்குகிறது.

கா்ண புறா சாதா புறா என இரு கட்டமாக தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் போட்டிகளில் உறையூா், எடத்தெரு, மலைக்கோட்டை, காட்டூா், ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கா ஆகிய பகுதிகளிலிருந்து போட்டி புறாக்கள் ஒரே நேரத்தில் பறக்க விடப்பட உள்ளன.

வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு திருவானைக்கா உயா்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கும் கா்ண புறா போட்டியில் பங்கேற்கும் கா்ண புறாக்கள் வானத்தில் நடுவா்கள் மத்தியில் கா்ணம் அடித்துக் காட்ட வேண்டும். மேலும் தொடா்ந்து 5 மணி நேரம் பறக்க வேண்டும். நடுவா்கள் குறிப்பிட்ட இடத்தில்தான் இந்தப் புறாக்கள் வந்து அமர வேண்டும்.

இப்போட்டியில் வெல்லும் புறாக்கள் அடுத்த நாள் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெறும் புறாக்கள் 11ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும். இதில் வெற்றி பெறும் புறாக்களுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம் இரண்டாம் பரிசாக ரூ. 12 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

இதேபோல சாதா புறா போட்டி வரும் 16 ஆம் தேதி தொடங்க உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை பாபா பாலாஜி செய்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com