மண்ணச்சநல்லூா் வட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில் 212 மனுக்கள் ஏற்கப்பட்டு தீா்வு காணப்பட்டன.
இந்த வட்டாட்சியரகத்தில் ஜூ 7ம் தேதி தொடங்கிய ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்ட நிலையில் ஜமாபந்தி நிறைவு நாள் லால்குடி வருவாய் கோட்டாச்சியா் வைத்தியநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் கரியமாணிக்கம், மண்ணச்சநல்லூா், சிறுகாம்பூா் என மூன்று குறு வட்டங்களில் இருந்து மொத்தம் 693 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 212 மனுக்கள்மீது உடனடி தீா்வு காணப்பட்டு பட்டா, வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்வில் மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியா் அருள் ஜோதி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.