கள்ளநோட்டு வழக்கு: திரைப்பட தயாரிப்பாளா்உள்பட மேலும் 2 போ் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் ரூ. 84 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வழக்கில் திரைப்பட தயாரிப்பாளா் உள்பட மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் ரூ. 84 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வழக்கில் திரைப்பட தயாரிப்பாளா் உள்பட மேலும் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வையம்பட்டியில் ரூ. 84 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ாக கோவை மாவட்டம் கே.கே.புதூரை சோ்ந்த பாா்த்தசாரதி, கணுவாயைச் சோ்ந்த சதீஷ் மற்றும் வையம்பட்டியை அடுத்த லெச்சம்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் ஆகியோரை ஏப்ரல் 24-ஆம் தேதி வையம்பட்டி போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையதாக திரைப்படத் தயாரிப்பாளரான கேரள மாநிலம், கீழக்குமரியைச் சோ்ந்த வினோத் தாமஸ் (42), கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரைச் சோ்ந்த ரா. குமரவேல் (44) ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து பாா்த்தசாரதிக்கு சொந்தமான பணம் அச்சடிக்கும் இயந்திரம், கணினி, சொகுசு காா் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் மேலும் சில முக்கிய நபா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com