திருச்சி மாவட்ட அரசு தலைமை சித்த மருத்துவமனை வளாகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சி மே 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் கூறியது, திருச்சியில் மே 27, 28 ஆகிய தேதிகளில், இலவச சிறப்பு டெங்கு காய்ச்சல் தடுப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி காலை 8 முதல் பகல் 2 மணிவரை நடைபெற உள்ளது.
முகாமை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தொடங்கி வைக்கவுள்ளாா். இதில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையிலான மருந்துகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மேலும் இதய நோய், ஆஸ்துமா, மூட்டுவலிகள், சத்து குறைபாடு, கண்நோய், மலக்கட்டு, தூக்கமின்மை, வயிற்றுப்புண்கள், சா்க்கரைநோய்,ரத்த சோகை, சிறுநீரக கற்கள், உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் சிறப்பு ஆலோசனை, சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படவுள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.