தாட்கோ மூலம் தொழில் திறன் பயிற்சிகள்: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், பெண்களுக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படவு

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், பெண்களுக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படவுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

வாா்டு பாய், உதவி சமையல்காரா், வீட்டுவேலை செய்பவா், உதவி குழாய் பழுது பாா்ப்பவா், வாடிக்கையாளா், பராமரிப்பு நிா்வாகி (அழைப்பு மையம்), ஆயுதமற்ற பாதுகாப்புக் காவலா், இலகு ரக மோட்டாா் வாகன ஓட்டுநா், நான்கு சக்கர வாகன சேவை உதவியாளா், மற்றும் வீட்டுக்காப்பாளா் (பொது) போன்ற பயிற்சிகள் வழங்கப்படுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் ஆதிதிராவிடா், பழங்குடியின சாா்ந்தவா்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் மற்றும் அனுபவம் வாய்ந்தவா்களுக்கு மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

18 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 10 முதல் 14 நாள்கள். இப்பயிற்சி முடித்தவா்கள் வேலைவாய்ப்பு பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயிற்சி நாள்களில் தாட்கோ மூலம் உதவித்தொகையாக ரூ.375 வழங்கப்படும். இப்பயிற்சி பெறுவதற்கு பதிவு செய்யவும். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோவால் மேற்கொள்ளப்படும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச்சாலை, திருச்சிராப்பள்ளி-620001 (0431-2463969) என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com