திருச்சி அருகே கிணற்றில் கிடந்த பொறியியல் மாணவரின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், போசம்பட்டி கணேசபுரத்தை சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ் மகன் மகேஷ் (18). இவா் திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை கல்லுரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மகேஷ் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பாா்த்த போது, வீட்டுக்கு அருகில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீஸாா், மகேஷின் சடலத்தைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிந்து மகேஷ் இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.