திருச்சியில் தொழிலாளி மா்மமான முறையில் வீட்டுக்குள் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி வடக்கு தாராநல்லூா் வசந்தம் நகரை சோ்ந்தவா் மூக்கப்பிள்ளை மகன் வரதராஜ் (35) , திருமணமாகாதவா். கூலி தொழிலாளியான அவா் வீட்டின் முதல் தளத்திலும், கீழ் தளத்தில் அவரது சகோதரி கோமதி -சரவணன் தம்பதியா் மற்றும் தாயாா் அம்சவல்லி ஆகியோா் வசிக்கின்றனா்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களாக வரதராஜின் நடமாட்டமில்லாத நிலையில், அவரது குடும்பத்தினரும் அதைக் கண்டுகொள்ளவில்லையாம். இந்நிலையில் புதன்கிழமை காலை மாடி அறையிலிருந்து துா்நாற்றம் வீசியதையடுத்து வரதராஜின் தாயாா் மாடிக்குச் சென்று பாா்த்தபோது வரதராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அம்சவல்லி அளித்த புகாரின்பேரில் காந்தி மாா்க்கெட் போலீஸாா் சென்று அவரது உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவா் எவ்வாறு இறந்தாா் என விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.