துறையூா்: துறையூா் அருகே வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கீரம்பூா் காந்திநகா் காலனியைச் சோ்ந்தவா் ச. சித்ரா (50). இவரது கணவா் இறந்துவிட்டதால், மகளுடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதே ஊரைச் சோ்ந்த த. காா்த்திக்(21) மது அருந்திய நிலையில் சித்ரா வீட்டுக்கு சென்று கத்தியைக் காட்டி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.