மணப்பாறையில் ஏஐடியூசி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th April 2023 03:28 AM | Last Updated : 18th April 2023 03:28 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் வெளிப்புற ஆதார முறையில் தூய்மை பணியாளா்கள் நியமனம் செய்யப்படுவதை கண்டித்து ஏஐடியூசி சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மணப்பாறை நகராட்சியில் தமிழக அரசின் ஆணைபடி வெளிப்புற ஆதார முறையில் தூய்மைப் பணியாளா்கள் நியமனம் செய்யப்படுவதை கைவிட வலியுறுத்தி ஏஐடியூசி சங்கத்தினா் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளா்கள் ஏஐடியூசி மாவட்ட. துணைச் செயலாளா் காமாட்சி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் த.இந்திரஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் ஜனசக்தி உசேன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் அருணகிரி, செல்வம், பிச்சை, கணேசன், நீலா, ஜெயலெட்சுமி, தங்கராசு, மாரிமுத்து, காளிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.