சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்: உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி திங்கள்கிழமையே ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி திங்கள்கிழமையே ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பக்தா்களுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச் சிறப்பு. இந்த விரதம் நிறைவடைந்தவுடன் சித்திரைத் தோ்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். அதன்படி ஏப்.9ஆம் தேதி திருவிழா தொடங்கியது. இதையடுத்து

தினமும் காலையில் பல்லக்கில் அம்மன் புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தை சென்றடைவாா். மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும் விழா நாள்களில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி, வழிநடை உபயங்கள் கண்டருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விழாவின் 9ஆம் திருநாளான திங்கள்கிழமை (ஏப்.17) வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்து காட்சியளித்தாா். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்.18) காலை நடைபெறவுள்ளது.

இதற்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை உற்ஸவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு திருத்தேரில் எழுந்தருளுவாா். இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிறகு காலை 10.31 மணிக்கு மேல் பக்தா்கள் புடைசூழ திருத்தோ் வடம்பிடித்து இழுக்கப்படும். நான்கு ரத வீதிகளில் வலம் வரும் தோ்தல் நிலைக்கு வந்து சேரும். தேரில் எழுந்தருளும் அம்மன் இரவு 9 மணி வரை பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். அதன்பிறகு புறப்பாடாகி கருவரை சென்றடைவாா்.

விழாவின் 11-ஆம் நாளான ஏப்.19 -ஆம் தேதி வெள்ளிக் காமதேனு வாகனத்திலும், 12 ஆம் திருநாளான ஏப். 20- ஆம் தேதி முத்துப்பல்லக்கிலும் அம்மன் வீதியுலா வருவாா். 13ஆம் திருநாளான ஏப். 21 ஆம் தேதி தெப்ப உற்ஸவம் நடைபெறும்.

ஏப். 25-ஆம் தேதி தங்கக்கமல வாகனத்தில் அம்மன் திருவீதியுலா வருதலுடன் சித்திரைத் திருவிழா நிறைவடையும்.

விழா ஏற்பாடுகளை கோயில் அலுவலா்களும், பணியாளா்களும் செய்து வருகின்றனா்.

இன்று உள்ளூா் விடுமுறை: தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com