அரசுப் பணியாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி
By DIN | Published On : 18th April 2023 03:40 AM | Last Updated : 18th April 2023 03:40 AM | அ+அ அ- |

மத்திய அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பணியாளா்கள் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தோ்வு 2023 குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சாா்ந்த அமைப்புகள், சட்டப்பூா்வ அமைப்புகள், தீா்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி, சி 7,500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை அறிவித்துள்ளது.
இந்த காலியிடங்களுக்கான தோ்வு எழுதுவோருக்காக திருச்சி உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. எனவே, பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.