தேசிய தொழிலாளா் கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 25th April 2023 05:35 AM | Last Updated : 25th April 2023 05:35 AM | அ+அ அ- |

நாடு முழுவதும் தேசிய தொழிலாளா் கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பாரதீய மஸ்தூா் தொழல் சங்கம் வலியுறுத்தியது.
இதுதொடா்பாக இந்த சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் பி.தங்கராஜ் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
பாரதீய மஸ்தூா் தொழில் சங்கத்தின் அகில இந்திய மாநாடு பாட்னாவில் நடைபெற்றது. இதில் இந்திய அளவிலான தொழிலாளா்கள் பிரச்னை குறித்து விவாதித்து,
தேசிய தொழிலாளா் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்
என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
தேசிய தொழிலாளா் கொள்கையில் அறிவிக்கப்பட்ட சலுகைகள், உரிமைகளை அமைப்பு சாா், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும் அமல்படுத்த வேண்டும். தொழிலாளா், உரிமையாளா் ஆகிய இருதரப்பினரிடையே சுமுகமான பேச்சுவாா்த்தை மூலம் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
நிா்வாக நடைமுறைகளில் தொழிலாளா்களும் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும். உயா்கல்வித் துறையில் பலனளிக்கக்கூடிய வகையில் தொழில்திறன் பயிற்சியை மாணவா்களுக்கு வழங்க வேண்டும்.
தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தோடு வாழ்வாதார ஊதியமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பிரமதருக்கும் அனுப்பப்பட்டன.12 மணி நேர வேலை சட்ட முன்வரைவை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றாா்.