மணப்பாறையில் ‘எனது வீடு ராகுல் வீடு‘ பிரசாரம்: எம்.பி. ஜோதிமணி தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 25th April 2023 05:40 AM | Last Updated : 25th April 2023 05:40 AM | அ+அ அ- |

சின்னமனப்பட்டியில் வீடு ஒன்றில் ‘எனது வீடு ராகுல் வீடு‘ ஸ்டிக்கரை ஓட்டிய எம்.பி. செ.ஜோதிமணி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றிய பகுதிகளில், திங்கள்கிழமை ‘எனது வீடு ராகுல் வீடு‘ பிரசாரத்தை கரூா் எம்.பி. செ.ஜோதிமணி தொடக்கி வைத்தாா்.
ராகுல்காந்தி குடியிருந்த அரசு பங்களாவை காலி செய்ததற்கு எதிராக கரூா் மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சம் வீடுகளில் ‘எனது வீடு ராகுல் வீடு‘ என்ற பிரசாரம் நடைபெற்று வருகிறது இதன்ஒரு பகுதியாக கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் சின்னமனப்பட்டி, மேட்டுக்கடை பிரிவு, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் தெத்தூா் மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் ‘எனது வீடு ராகுல் வீடு‘ ஸ்டிக்கரை வீடுகளில் ஒட்டி, பிரசாரத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில் மணப்பாறை நகரத் தலைவா் எம்.ஏ.செல்வா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ்குமாா், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ராம்பிரகாஷ், வட்டாரத் தலைவா் சத்தியசீலன், நகரத் துணைத் தலைவா் நசீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.