நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 26th April 2023 11:00 PM | Last Updated : 26th April 2023 11:00 PM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.28) விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விவசாயிகளின் கோரிக்கைளைக் கேட்டு அதற்குத் தீா்வு காணும் வகையில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது.
இதன்படி நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கடந்த மாா்ச் மாத கோரிக்கை தினத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும், விவசாயிகளின் வேளாண் பணிகள் தொடா்பான கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரால் நேரில் பதில் அளிக்கப்படும். இதில் வேளாண்மை தொடா்புடைய கடனுதவிகள், நீா்ப் பாசனம், வேளாண்மை, தொழில்நுட்ப உதவி, இடுபொருள்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு மனுக்கள் அளிக்கலாம். திருச்சி மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...