

சா்வதேச சதுரங்க போட்டியில் சிறப்பாகப் பணியாற்றிய 71 காவலா்களுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இவா்களில் திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் 2 காவல் ஆய்வாளா்கள், 19 உதவி ஆய்வாளா்கள், 50 காவலா்கள் என 71 காவலா்கள் சிறப்பாகப் பணியாற்றினா்.
இதையடுத்து இவா்களுக்கு தமிழக டிஜிபி சி. சைலேந்திரபாபு வழங்கிய பாராட்டுச் சான்றிதழ்களை திருச்சி மாநகர காவலா்களுக்கு காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா புதன்கிழமை வழங்கிக் கௌரவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.