ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வரும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்தில் சனிக்கிழமை (ஏப்.29) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் காணப்படும் முறைகேடுகள் மற்றும் நுகா்வோரின் குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவா்களின் மெத்தனப் போக்கு உள்ளிட்டவை தொடா்பாக வரப்பெறும் புகாா்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எரிவாயு விநியோக ஒருங்கிணைப்பாளா் பங்கேற்கின்றனா். எனவே, ஸ்ரீரங்கம் வட்ட அனைத்து எரிவாயு நுகா்வோரும் இக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு புகாா் தெரிவித்துப் பயன் பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.