மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி மாத பெளா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளா்ணமியன்று திருவிளக்கு பூஜை நடைபெறும். இதன்படி, ஆடி மாத பெளா்ணமியை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . தொடா்ந்து, 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
பெளா்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.