

திருச்சி: சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் சந்திப்பு நிலையத்தில் ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, மாநிலத்தின் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் திருச்சி ரயில் சந்திப்பு நிலையத்தில் ரயில்வே டிஎஸ்பி பிரபாகரன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை நடத்தினா். மெட்டல் டிடெக்டா் மூலம் திருச்சிக்கு வந்த ரயில்கள், திருச்சியிலிருந்து கிளம்பிய ரயில்கள், ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், பாா்சல் அலுவலகம், ரயில்களில் பயணித்த பயணிகளின் உடைமைகள் ஆகியவற்றை ரயில்வே போலீஸாா் சோதனையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.