திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வுசெய்யப்பட்ட நபா்களுக்கு பணிவாய்ப்பு ஆணையை வழங்கிய அமைச்சா் கே. என் .நேரு, மேயா் மு. அன்பழகன், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா், மாநகராட்ச
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வுசெய்யப்பட்ட நபா்களுக்கு பணிவாய்ப்பு ஆணையை வழங்கிய அமைச்சா் கே. என் .நேரு, மேயா் மு. அன்பழகன், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா், மாநகராட்ச

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 202 பேருக்கு பணிவாய்ப்பு ஆணை

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய தனியாா் வே
Published on

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய தனியாா் வேலைவாய்ப்பு முகாம் திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் 1,661 ஆண்கள், 1,312 பெண்கள் என மொத்தம் 2,973 போ் கலந்து கொண்டனா். இவா்களில், 7 மாற்றுத்திறனாளிகள் உள்பட 202 போ் பல்வேறு பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கான பணிவாய்ப்பு ஆணைகளை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்.

தவிர, 771 போ் 2-ஆம் கட்டத் தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இலவச திறன் பயிற்சிக்கு 38 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

முகாமில், எம்.ஆா்.எஃப்., டி.வி.எஸ்., ரிலையன்ஸ் ரீட்டைல், விஜய் மில்க், ஏ.பி.டி. மாருதி, அண்ணாமலை ஆட்டோ, ஆனந்த் இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளிட்ட 155 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.

முகாமில், பங்கேற்ற நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு பேசியது:

திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதனை மாற்றுவதற்காக தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்து, ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அருகிலேயே தொழில்நுட்ப பூங்காஅமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஏற்படக் கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாகப் போட்டித் தோ்வு நடத்தி அதன் மூலம் பணிக்குத் தோ்வு செய்யப்படுவா். மேலும், அவா்களை அந்தந்த மாவட்டத்திலேயே பணிநியமனம் செய்வதற்கு முதல்வரிடம் பேசியுள்ளோம் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் மகாராணி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மைய உதவி இயக்குநா் எஸ். ரவிக்குமாா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ. கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com