திருச்சியில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் தகுதித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு ஆக.21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் 2023-ஆம் ஆண்டு திட்ட நிரலின்படி 6553 இடைநிலை ஆசிரியா்கள் மற்றும் 3587 பட்டதாரி ஆசிரியா்கள் பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. எனவே, ஆசிரியா் தகுதித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த ஆசிரியா் தகுதித் தோ்வுகளுக்கு தயாராகும் போட்டித் தோ்வா்கள் இப்பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன் பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 0431-2413510, 94990-55901 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.