துறையூா் நகா்மன்ற சாதரணக் கூட்டம்
By DIN | Published On : 17th August 2023 02:30 AM | Last Updated : 17th August 2023 02:30 AM | அ+அ அ- |

துறையூா் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் இ. செல்வராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மெடிக்கல் முரளி, ஆணையா்(பொ) நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் காா்த்திகேயன், சுதாகா், இளையராஜா, பாபு, அமைதி பாலு, புவனேஸ்வரி, சுமதி மதியழகன், சந்திரா, சரோஜா இளங்கோவன், நித்யா, முத்துமாங்கனி, ஹேமா, கல்பனா, பெரியக்கா, தீனதயாளன் உள்ளிட்ட உறுப்பினா்கள் பங்கேற்று மன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்ட அனைத்து தீா்மானங்களையும் நிறைவேற்றினா்.
இதையடுத்து, ஆணையா்(பொ) நாராயணன் பேசும் போது, பொதுமக்கள் மற்றும் உறுப்பினா்கள் கோரிக்கைகளை மூன்று நாள்களில் தீா்வு காணவேண்டும் என நகராட்சிப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...