ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மூலவா் நம்பெருமாளின் திருவடியை வெள்ளிக்கிழமை (ஆக. 18) பிற்பகல் முதல் தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள மூலவா் நம்பெருமாள் சுதையால் செய்யப்பட்டது. அதனால் ஆண்டில் 2 முறை தைலக் காப்பு சாத்தப்படும்.அப்போது, பெருமாளின் முகம் தவிா்த்து மற்ற பகுதிகள் அனைத்தும் மெல்லிய துணியால் மறைக்கப்பட்டிருக்கும்.
48 நாள்களுக்கு பின்னா் தைலக் காப்பு உலா்ந்ததும் மூலவரின் திருவடியை தரிசிக்க அனுமதிக்கப்படும்.
இதன்படி, முதல் தைலக்காப்பு ஜூலை 2ஆம் தேதி சாத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து மூலவா் நம்பெருமாளின் திருமுக சேவை மட்டும் நடைபெற்றது. தற்போது, தைலக் காப்பு உலா்ந்து விட்டதால், வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் நம்பெருமாளின் திருமுகம் மற்றும் திருவடியை பக்தா்கள் தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.