திருச்சி மாவட்டத்தில் நெல், பருத்தி, மக்காசோளம் பயிா்களுக்கு 28,119 விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளனா்.
பருவ மழைப் பொழிவு குறைவு, அணைகளில் நீா்மட்டம் குறைவு, விவசாயத்துக்கு போதுமான தண்ணீா் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டு பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்ய முன்வரவில்லை. இதனால், பயிா்க்காப்பீடு எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகிறது. ஆனாலும், நிலத்தடி நீா் பாசனத்தை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள், மத்திய அரசின் பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் பரவலாக பயிா்க்காப்பீடு செய்துள்ளனா்.
நிகழாண்டு பிரதமரின் பயிா்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரபி பருவத்துக்கு நெல் பயிருக்கு (ஏக்கருக்கு) காப்பீடுத் தொகையான ரூ. 37,346.40-க்கு பிரீமியத் தொகையாக ரூ. 560.20-ம், பருத்திக்கு (ஏக்கருக்கு) காப்பீட்டுத் தொகையான ரூ. 11,590.80 க்கு பிரீமியத் தொகையாக ரூ. 579.54-ம், மக்காச்சோளத்துக்கு (ஏக்கருக்கு) காப்பீட்டுத் தொகையான 22,477.20-க்கு பிரீமியத் தொகையாக ரூ. 337.16 ம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, அந்தநல்லூா் ஒன்றியத்தில் 2,382.8 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள 1,375 விவசாயிகள், லால்குடி ஒன்றியத்தில் 4,823.2 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 2,319 விவசாயிகள், மண்ணச்சநல்லூா் ஒன்றியத்தில் 2,130.9 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 1,163 விவசாயிகள், 1,508.9 ஏக்கா் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள 570 விவசாயிகள், 676.8 ஏக்கா் பருத்தி பயிரிட்டுள்ள 329 விவசாயிகள், மணப்பாறை ஒன்றியத்தில் 421.2 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 178 விவசாயிகள், 7.2 ஏக்கா் மக்காசோளம் பயிரிட்டுள்ள 4 விவசாயிகள், 1.87 ஏக்கா் பருத்தி பயிரிட்டுள்ள 2 விவசாயிகள், மணிகண்டம் ஒன்றியத்தில் 4,232.9 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 1,619 விவசாயிகள், மருங்காபுரி ஒன்றியத்தில் 822.3 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 314 விவசாயிகள், முசிறி ஒன்றியத்தில் 3,022.6 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 1,450 விவசாயிகள், 173.3 ஏக்கா் மக்காசோளம் பயிரிட்டுள்ள 64 விவசாயிகள், 29.03 ஏக்கா் பருத்தி பயிரிட்டுள்ள 15 விவசாயிகள், புள்ளம்பாடி ஒன்றியத்தில் 5,649.3 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 2,680 விவசாயிகள், 14,288.3 ஏக்கா் மக்காசோளம் பயிரிட்டுள்ள 4,473 விவசாயிகள், 1,628.6 ஏக்கா் பருத்தி பயிரிட்டுள்ள 959 விவசாயிகள், தாத்தையங்காா்பேட்டை ஒன்றியத்தில் 1,359.1 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 633 விவசாயிகள், 934.5 ஏக்கா் மக்காசோளம் பயிரிட்டுள்ள 325 விவசாயிகள், 32.24 ஏக்கா் பருத்தி பயிரிட்டுள்ள 18 விவசாயிகள், திருவெறும்பூா் ஒன்றியத்தில் 10,710.3 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 3,906 விவசாயிகள், தொட்டியம் ஒன்றியத்தில் 1,492.2 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 690 விவசாயிகள், 887.2 ஏக்கா் மக்காசோளம் பயிரிட்டுள்ள 328 விவசாயிகள், 112.6 ஏக்கா் பருத்தி பயிரிட்டுள்ள 59 விவசாயிகள், துறையூா் ஒன்றியத்தில் 1,660.5 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 974 விவசாயிகள், 2,530 ஏக்கா் மக்காசோளம் பயிரிட்டுள்ள 988 விவசாயிகள், 281 ஏக்கா் பருத்தி பயிரிட்டுள்ள 184 விவசாயிகள், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் 3,622.8 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 1,568 விவசாயிகள், 769.3 ஏக்கா் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள 324 விவசாயிகள், 46.66 ஏக்கா் பருத்தி பயிரிட்டுள்ள 31 விவசாயிகள், வையம்பட்டி ஒன்றியத்தில் 305.9 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 167 விவசாயிகள், 912 ஏக்கா் மக்காசோளம் பயிரிட்டுள்ள 398 விவசாயிகள், 16.88 ஏக்கா் பருத்தி பயிரிட்டுள்ள 12 விவசாயிகள் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனா்.
இதன்படி, 19,036 விவசாயிகள் 42,636.67 ஏக்கா் நெல் பயிருக்கும், 7,474 விவசாயிகள் 22,011.18 ஏக்கா் மக்காச்சோளப் பயிருக்கும், 1,609 விவசாயிகள் 2,825.89 ஏக்கா் பருத்திக்கும் என மொத்தம் 28,119 விவசாயிகள் 67,473.75 ஏக்கருக்கு நிகழாண்டு ரபி பருவத்துக்கான காப்பீட்டினை செய்துள்ளனா் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.